பூகொட ஓவிட்டிகமவிலுள்ள 5.5 ஏக்கர் காணியொன்றை 41 பேருக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் 36 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இப்பெண் இந்தியாவுக்கு தப்பிச்சென்று மீண்டும் இலங்கை திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை, மஹாரகம, கொஸ்கம, பூகொட, மொறட்டுவை, ஹோமாகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பல வர்த்தகர்கள் ஒரே காணியை 5 மில்லியன் ரூபா வரை கொடுத்து வாங்கியதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்திலுள்ளவர்களின் உதவியை இப்பெண் பெற்றுள்ளதாக மேற்படி வர்த்தகர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கம்பஹா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments