அமெரிக்காவை சேர்ந்த பெர்கின்ஸ் என்ற பெண் கர்ப்பம் அடைந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவரது வயிற்றில் 6 சிசுக்கள் உருவாகி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து
டாக்டர்கள் அவரது கருவின் வளர்ச்சியை 30 வாரமாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு 35 டாக்டர்கள் கொண்ட ஒரு குழுவினர் முன்னிலையில் பிரசவம் நடந்தது. ஒவ்வொரு குழந்தையும் 4 நிமிட இடைவெளியில் பிறந்தன. இதில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. பிறந்த குழந்தைகளில் அதிகபட்சமாக 2.15 பவுண்டு எடையும், குறைந்தபட்சமாக 1.10 பவுண்டு எடையும் இருந்தது. 6 குழந்தைகள் பெற்றெடுத்தது மிகுந்த சந்தோஷமாக இருப்பதாக பெர்கின்ஸ் கூறியிருக்கிறார். -mohamed sujath-

0 Comments