சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 85 பேர் காலியிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் வைத்து நேற்று மi கடற்பiயினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 75 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 6 சிறார்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் தற்போது காலியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
0 Comments