மதகஜ ராஜா படத்தில் கலக்கும் விஷால்- சந்தானம் கொமெடி


நடிகர் விஷால், தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகி வரும் மதகஜ ராஜா என்ற எம்.ஜி.ஆர் படத்தில் உற்சாகமாக நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இப்படத்தில் விஷாலுடன் கொலிவுட் கொமெடி நட்சத்திரம் சந்தானம் இணைந்து கலக்கியுள்ளார்.
எம்ஜிஆர் என்று சுருக்கமாக கூறப்படும் மதகஜ ராஜா படத்தில் நடித்துள்ளேன். இது ஒக்ஸனை பிரதானமாக கொண்ட திரைக்கதையுள்ள படமாகும்.
வித்தியாசமான திருப்பங்கள் உள்ள இப்படத்தில் நான் நாயகனாக வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நானும் சந்தானமும் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளோம்.
படத்தில் கேபிள் ஆபரேட்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன் என்று மதகஜ ராஜா பட நாயகன் விஷால் கூறியுள்ளார்.