முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
நடைபெற்ற வன்முறை சம்பங்களில் பலர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் போராட்டம்:
சர்ச்சைக்குரிய அமெரிக்கத் திரைப்படத்தினால் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்க தூதரகங்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் பாகிஸ்தானிலும் பரவியுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள திர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிசாருடன் கலவரம் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
படக்காட்சிகளுக்கு தடை: கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் சமூக வலைதளமான யூடியூப்பில் ஒளி பரப்பப்படும் அமெரிக்க திரைப்படத்தினை உடனடியாக தடை செய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்தத் திரைப்படத்தின் காட்சிகள் அடங்கிய 750-க்கும் அதிகமான தொடர்புகள் தடை செய்யப்பட்டன.
யூடியூப்பில் மட்டும் தினமும் 100க்கும் அதிகமான சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் போராட்டம்:
இதே போன்று ஆப்கானிஸ்தானில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலவரம் மூண்டது.
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் சாலையில் முகாமிட்டுள்ள நேட்டோ மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்களின் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரண்டு போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், யாரும் காயமடையவில்லை. இதனால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
அவுஸ்திரேலியாவில் உஷார் நிலை:
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தினர் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தரக் கோரி, பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் அனுப்பி வருவதாக பொலிசில் தெரிவித்துள்ளனர்.
இதுபோல செய்திகளைப் பரப்புவோரைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். எந்த விதமான போராட்டமாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள பொலிசார் தயாராக உள்ளனர் என சிட்னி பொலிஸ் கமிஷனர் ஆன்ட்ரூ சிபியான் தெரிவித்தார்.
கடந்த 15ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தற்போது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் பரப்பப்படுவதால், அவுஸ்திரேலியாவில் பொலிசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

0 Comments