கொலிவுட்டில் பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை வசுந்தரா.
பின்னர் போராளி, தென் மேற்கு பருவக்காற்று படங்களில் நடித்த இவர் கொமெடி படமொன்றில் 'தில்லு முல்லு' நாயகன் சிவா உடன் இணைந்துள்ளார். தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ். அமுதனின் உதவி இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும், இதுவரையில் பெயர் வெளியிடப்படாத கொமெடிப்படத்தில், 'தில்லு முல்லு' நாயகன் சிவா, வசுந்தரா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
இது குறித்து வசுந்தரா கூறுகையில், நான் படிப்பில் ஆர்வம் காட்டியதால் இடையில் படங்களில் நடிக்கமுடியாமல் போனது. கொமெடி பட ஸ்கிரிப்ட்டை படிச்சதும் என்னால் சிரிப்பை அடக்க முடியலை.
முதன்முறையாக நான் கொமெடி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் இந்த ரொமான்டிக் கொமெடி படத்தில் சிவா உடன் நடிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உதவியாளர் சரவணன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். டிசம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்