மனிதப் புதைகுழிகள் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போருக்கு பின்னர் கைது செய்யப்பட்டு, சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் படுகொலை செய்யப்பட்டோரே, இந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்டவர்களை புதைப்பதற்காக தோண்டப்பட்ட புதைகுழியை படையினர் சரிவர மூடாததால், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்கள் துர்நாற்றம் வீசத் தொடங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஒட்டிசுட்டான் - புதுக்குடியிருப்பு மற்றும் பரந்தன் - முல்லைத்தீவு வீதிகளில் கடந்த இரு வாரங்களாக இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் வழமைக்கு மாறாக ஒடித் திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஐநா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதையடுத்து அவர்கள் வன்னியில் போர் நடைபெற்ற பிரதேசங்களை பார்வையிடலாம் என்ற அச்சத்தில் படையினர் அவ்விடங்களை துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்புபட்ட செய்தி: புதுக்குடியிருப்பில் புலிகளின் சுரங்க வீடுகள் இரண்டு கண்டுபிடிப்பு