தெலுங்கு முன்னணி நாயகர்களோடு இணையும் அமலா பால்


மைனா படத்தின் மூலம் கொலிவுட் நாயகிகள் வரிசையில் இணைந்த அமலா பால்,தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகர்களுடன் அமலா பால் இணைகிறார்.
நான் இப்போது இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படும் படத்தில் நடிக்கிறேன்.
தமிழில் 'நிமிர்ந்து நில்' என்று பெயர் வைத்துள்ளார்கள். இதில் ஜெயம் ரவி, தெலுங்கு பட நாயகன் நானி இருவருடனும் நடிக்கிறேன்.
மேலும் தெலுங்கு பட உலகின் முன்னணி நாயகர்களான ராம் சரண் தேஜா, மகேஷ் பாபு நடிக்கும் படங்களில் நான் நடிக்கிறேன் என்று அமலா பால் கூறியுள்ளார்.
இது தவிர தனுசுடன் சொட்ட வாளக்குட்டி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகின்றார்.