கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த சூப்பர் லைன் (Super-line) பஸ்மீது நேற்று இரவு மட்டக்களப்பு தாண்டிய பிரதேசத்தில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் கல்வீச்சு இடம்பெற்றது.
இதில் எவருக்கும் பலத்த காயம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோது முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் பொலீசாரின் உதவியுடன் சென்று மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.