கவுரவம் பட நாயகி படப்பிடிப்பில் படுகாயம்




ராதாமோகன் இயக்கும் கவுரவம் படத்தின் நாயகி யாமி படப்பிடிப்பில் படுகாயமடைந்தார்.பயணம் படத்துக்குப் பிறகு ராதா மோகன்
இயக்கும் படம் கவுரவம்.
இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமி கவுதம் நடிக்கின்றனர். மும்பையை சேர்ந்தவரான யாமி, கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்து வருவதால், படக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
பாடல் காட்சியொன்றில் யாமி சைக்கிள் ஓட்டிக் கொண்டு போவது போல படமாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்த யாமிக்கு பலத்த அடிபட்டது. உடனே மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தார்.
அவரை ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து யாமி கூறுகையில், ஸ்பாட்டில் மருத்துவர் இருந்ததால் பெரிய பாதிப்பில்லாமல் தப்பித்தேன் என்றார்.

Post a Comment

0 Comments