இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பயணங்களை இலகுபடுத்துவதற்காக இரு நாடுகளும் புதிய விஸா விதிகளை அமுல்படுத்த இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானி காருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டது.
மூத்த பிரஜைகளுக்கு நாட்டை வந்தடைந்தவுடன் விஸா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆன்மீக யாத்திரைகள், சுற்றுலா மற்றும் மாணவர்களுக்காக புதிய வகை விஸா வழங்கப்படவுள்ளது.
2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை தாக்குதல்களின் பின்னர் மோசமடைந்த இந்திய – பாகிஸ்தான் உறவை மீளக்கட்டியெழுப்புவதற்கான சமாதான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாகிஸ்தான் விஜயம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானி கார், இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில், 'நாம் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதுடன் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடக்கூடாது. புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் உள்ளது' எனக் கூறினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உரையாற்றுகையில், இரு நாடுகளும் தமது பார்வையை எதிர்காலம் நோக்கி திருப்ப வேண்டும் எனக் கூறினார். 'கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் நாம் வரலாற்றுக் கைதியாக இருக்கக்கூடாது. எமது பார்வையை எதிர்காலம் நோக்கி திருப்புவோம்' என அவர் கூறினார்.