முஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாம் மதத்தையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இஸ்லாத்துக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை அமெரிக்கா உடனடியாக தடை செய்ய வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொழும்பு மாளிகாவத்தையிலிருந்து ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலூடாக அமெரிக்கத் தூதரகத்தை அடைய முற்பட்டனர். எனினும் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.                            
-mohamed sujath-

Post a Comment

0 Comments