இலங்கையின் முன்னணி நவநாகரிக வர்த்தக குறியீடாகவும் ஆண்கள் ஆடைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளதுமாக திகழும் ஹமீடியா நிறுவனமானது, சர்வதேச அளவில் பிரபலமான சுப்பர் ஸ்டாரான மெக்ஸி பிரீஸ்ட் இலங்கையில் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சி மற்றும் எதிர்வரும் நாட்களில் வெளியாகவுள்ள இசை வீடியோ ஆகிய இரண்டிற்காகவும், அவருக்கு ஆடை வழங்கியதன் மூலம் தனிச்சிறப்புமிக்க கௌரவத்தை அண்மையில் பெற்றுக் கொண்டுள்ளது.
பாடல் பாடுவதில் தன்னுடைய ஈடிணையற்ற ஸ்டைல் மற்றும் பிரபல்யமடைந்த அவரது பாடல்களான ‘Close To you’, ‘That Girl’ ஆகியவற்றினால் உலகெங்கும் புகழ்பெற்றுள்ள மெக்ஸி பிரீஸ்ட், அனைத்து நுழைவுச் சீட்டுகளும் முற்றாக விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் ஹிக்கடுவையில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் மூலம், இலங்கையிலுள்ள ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளார்.
மெக்ஸி பிரீஸ்டின் இலங்கைச் சுற்றுப் பயணத்திற்கான உத்தியோகபூர்வ ஆடை வழங்குனராக ஹமீடியா திகழ்கின்ற நிலையில், கொழும்பு 3, பகத்தல வீதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் பிரத்தியேக கருத்திட்ட காட்சியறையான Envoy Mansionஇற்கு - தனது இறுக்கமான நேர ஒதுக்கீடுகளுக்கு மத்தியிலும் அவர் விஜயம் செய்திருந்தார்.
'மிகவுயர்ந்த பிரத்தியேக தன்மையைக் கொண்ட நவநாகரிக ஆடைக் கலையகமாகவும், அதேநேரம் மிக உன்னதமான தராதரங்களைப் பேணும் சர்வதேச வர்த்தக குறியீடுகளின் காட்சியறைகளுக்கு இணையான ஒன்றாகவும் Envoy Mansion திகழும் என்பதை நான் கண்டறிந்து கொண்டேன். உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரு விடங்களிலும் இந்த நிறுவனம் கடைப்பிடித்துவரும் தராதரத்தின்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன்' என்று Envoy Mansion காட்சியறையை சுற்றிப்பார்த்த பின்னர் பிரீஸ்ட் கருத்துத் தெரிவித்தார்.
'இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் பிரமாண்டமான முறையில் Envoy Mansion திறந்து வைக்கப்பட்ட பின்னர் அக்காட்சியறைக்கு வருகைதந்துள்ள முதலாவது சர்வதேச பிரபலமாக மெக்ஸி பிரீஸ்ட் இடம்பிடிக்கின்றார். சர்வதேச நவநாகரிக வர்த்தக குறியீடுகள் பலவற்றுக்கு சமமான தராதரத்தைக் கொண்டுள்ள எமது உள்நாட்டு வர்த்தக குறியீடான FH இன் மூலம் அவருக்கு ஆடை அணிவிக்க சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். பிரபலமான நபர்கள் மற்றும் ஐரோப்பிய நாகரிக போக்குகளை பின்பற்றிவரும் நபர்களுக்காக, மட்டுப்படுத்தப்பட்ட வடிவமைப்பாளர் தெரிவுகளை FH வர்த்தக குறியீடு கொண்டுள்ளது' என்று நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் தெரிவித்தார்.
'இந்த ஆடைகள் அனைத்தும் மிகச் சிறந்த பெப்ரிக் துணி வகைகளைப் பயன்படுத்தி, அளவின் அடிப்படையிலான தையல் முறையில் 24 மணித்தியால நேரத்திற்குள் எம்மால் தைத்து முடிக்கப்பட்டது' என்று விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சமுது டீ சில்வா கூறினார். அதுமாத்திரமன்றி உள்நாட்டில் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ள மெக்ஸி பிரீஸ்டின் இசை வீடியோவுக்காக அவர் கலாசாரம்சார் ஆடைகளை தெரிவுசெய்துகொண்டார் என்றும் சில்வா குறிப்பிட்டார்.
Envoy Mansion காட்சியறையின் முகாமையாளர் ஜீ.ஆர். சாந்த கூறுகையில், 'மிகவும் வயைறுக்கப்பட்ட நேரத்திற்குள் மெக்ஸிக்கும் அவரது குழுவினருக்கும் அளவு அடிப்படையில் ஆடைகளை தைத்து வழங்குவதும், அதேபோன்று கிட்டத்தட்ட குறைந்த அளவிலான விட்டுக்கொடுப்புகளோடு, அல்லது அதுவுமின்றி அப்பணியை செய்து முடிப்பதும் எமக்கு ஒரு சவாலாக அமைந்திருந்தது' என்றார்.
மெக்ஸி பிரீட்ஸிற்கு ஆடை வழங்கியது போலவே – கடந்த காலங்களில் சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்றவர்களான அதிதிகள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கும் ஆடைகளை வழங்கிய பெருமையை ஹமீடியா பெறுகின்றது. விருந்துபசார நிகழ்வு, வர்த்தக ரீதியான மற்றும் சம்பிரதாயபூர்வ வைபவங்களுக்கான ஆடைகள் உள்ளடங்கலாக அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் பொருத்தமான பிரத்தியேக ஆடைத் தெரிவுகளை இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. ஆண்களுக்கு அவர்களது அளவுக்கேற்ப உயர்தரமான ஆடைகளை 'பெஸ்பொக்' முறையில் தைத்து வழங்குகின்றது.
ஹமீடியா நிறுவனம் 1949ஆம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, சில்லறை ஆடை விநியோக துறையில் உன்னதமான காலடிகளை எடுத்துவைத்துள்ள அதேநேரம் தனது தனிச்சிறப்பு வாய்ந்த வடிவமைப்பு, தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் மிகச் சிறந்த தராதரத்தையுடைய ஆண்கள் ஆடைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளினால் இத்துறையில் அங்கீகாரத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளது. தரமான முறையில் தைக்கப்பட்ட ஆடைகளை உள்ளடக்கிய தனது சொந்த வர்த்தக குறியீடுகளான 'லீ பொன்ட்', 'என்வோய்', 'சிக்னேச்சர்' மற்றும் FH போன்றவற்றுக்கு மேலதிகமாக – உலக நவநாகரிகத்தில் தற்போது முன்னோடியாகவுள்ள Raymond, Lee, Wrangler, Van Heusen, Louis Philippe, Adidas போன்ற வர்த்தக குறியீடுகள் பலவற்றுடனும் வெற்றிகரமான வர்த்தக பங்காளித்துவத்தை பேணி வருகின்றது. இதனால் இலங்கையில் மிக நம்பிக்கைக்குரியதும் எதிர்பார்க்கப்பட்டிருந்ததுமான ஆண்கள் ஆடை நிபுணத்துவ நிறுவனமாக முன்னேற்றமடைந்துள்ளது.