பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற oh my god திரைப்படம் தமிழில் உருவாக உள்ளது.
அக்ஷய் குமார் நடித்து தயாரித்த படம் oh my god. இப்படத்தில் கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தால் கடவுளை அழிக்க நினைக்கிறான்.
ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்தின் திரைக்கதையை எதிர்மறையாக கொண்டதே ஆகும்.
பாபாவில் ரஜினி கடவுள் நம்பிக்கை அற்றவராக தொடக்கத்தில் காட்சி அளிப்பார். பின்னர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக மாறி எதிரிகளை வீழ்த்துவார்.
ஆனால் oh my god படத்தில் கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவன் தான் ஏமாற்றப்பட்ட பின்னர் கடவுளையே அழிக்க நினைக்கிறான்.
எனவே பாபா படத்திற்கு நேர் மாற்றம் என்பதால் இப்படத்தில் நடிக்க ரஜினி யோசிக்கிறார்.
ஏனெனில் ஒரு படத்தை முடித்தவுடன் இமயமலைக்கு செல்லும் ரஜினி, இப்படத்தில் நடிப்பாரா என்பதே சந்தேகமாகும்.
இருப்பினும் அக்ஷய் குமார் ரஜினியே நடிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம்.
0 Comments