இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பாடல் வழங்குநர்களான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT), அண்மையில் லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன் பிஎல்சி உடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டது.
இதன் ஊடாக SLT இன் பிரெஸ்டீஜ் அட்டை உரிமையாளர்கள் வைத்திசாலை சேவைகளில் விசேட கட்டணக் கழிவுகளை பெற்றுக்கொள்வதற்கு உரித்தளிக்கின்றது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் பிரெஸ்டீஜ் அட்டை உரிமையாளர்கள் ஆய்வுகூட பரிசோதனைகளில் 15 சதவீத கட்டணக் கழிவையும், கதிர்வீச்சு பரிசோதனைகள் உட்பட வெளிநோயாளர் பரிசோதனைகள் மற்றும் அனைத்து லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்தியசாலை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளும் சகல மருந்துகள் ஆகியவற்றின் மீது 5 சதவீத கட்டணக் கழிவை பெற்றுக்கொள்வர். இதற்கு மேலதிகமாக நியம உடல்நலப் பரிசோதனைகள் மீதும், உள்ளக நோயாளர் சேவைகள், ஆய்வுகூடப் பரிசோதனைகள் மற்றும் அறை வாடகை ஆகியவற்றின் மீது 10 சதவீத கட்டணக் கழிவை பெற்றுக்கொள்ள முடியும்.
0 Comments