பேர்லினில் இரு ஹெலிகொப்டர்கள் விபத்து




பேர்லின் ஒலிம்பிக் அரங்கத்திற்கு அருகில் 2 ஹெலிகொப்டர்கள் விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் பயிற்சியின்போது  இந்த 2 ஹெலிகொப்டர்களும் ஒன்றுடனொன்று நடுவானில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் விமானி ஒருவர் மரணமடைந்துள்ளார்.  4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்ற வேளையில் சுமார் 400 மத்திய  பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்  பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments