அவுஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபரொருவர் அங்கிருந்த 13 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அந்த ஹோட்டலின் ஜன்னல் ஓரத்தில் கைகளை உயர்த்தியுள்ள மூன்று பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடியை உயர்த்திப்பிடித்துள்ள காட்சிகள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து குறித்த ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார்; குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக அந்நாட்டு பிரதமர் டொனி அபார்ட் கூறியுள்ளார்.
இந்த ஹோட்டலினுள் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்பது தொடர்பிலும் பணயக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் 13 பேர் பணயகைதிகளாக தடுத்து வைக்கப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(படங்கள்: ஏ.எவ்.பி)
0 Comments