த.தே.கூ.வின் முடிவு இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள்

த.தே.கூ.வின் முடிவு இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் 48 மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று காலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளர் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன்படி இறுதி முடிவு என்ன என்பது தொடர்பில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments