
அட்லி இயக்கத்தில் `மெர்சல்’ படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் 61-வது படமான “மெர்சல்” படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜல்லிக்கட்டு வீரர், மேஜிக் கலைஞர் என விஜய்யின் இரு கெட்டப்களின் போஸ்டர்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மூன்றாவது போஸ்டரும் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் அட்லி, முதல் இரண்டு போஸ்டர்களையும் மிஞ்சும் விதத்தில் வித்தியாசமான கோணத்தில் மூன்றாவது போஸ்டரை வடிவமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
தனது 100-வது படமாக தேனாண்டாள் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது.
பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இறுதிகட்ட படப்படிப்பு சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குவினர் பங்கேற்றுள்ளனர். `மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.
0 Comments