இன்று காலை 3 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், 4 பேர் பலி, 15 பேர் காயம்
-Sunday, October 29, 2017
அம்பலாங்கொட, கொஸ்கொடவில் இன்று (29) அதிகாலை 3.15 மணியளவில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுதபிட்டிய, மெனிக் கம்மான, குருதுகம்பிட்டி ஆகிய கிராமங்களில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யுதபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தந்தையும் இரு புதல்வர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments