கலாபுசனம் கவிஞா் டொக்டா் தாசீம் அஹமத் எழுதிய பாடல் வரிகளை இசையமைத்து கலைக்கமல் பாடியுள்ளாா். இவ் வர்ண ராகங்கள்கொண்ட சீ.டீ வௌியீடு கலைக்கமலின் 36வது கீத் ராத் இசை நிகழ்ச்சியும் நேற்று (28) கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவா்த்தன உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வு தேசமான்ய அப்துல் கையும் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக ஒஸ்ரியா நாட்டின் முன்னாள் துாதுவா் வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளா் நாயகம் கவிஞா் எச். ஏ அசீஸ் கலந்து கொண்டு சீ.டீ வெளியிட்டு வைத்தாா். கௌரவ அதிதிகளாக மருதானை, தெஹிவளை இக்ராஹ் தொழில்நுடப்பக் கல்லுாாிகளின் ஓய்வு பெற்ற அதிபா் எம்.எச். ஏ சமத், ,ஜின்னாஹ் சரிபுத்தீன் ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா்.
இந் நிகழ்வில் இஸ்லாமிய , ஹிந்து பாடல்களை கலைக்கமலுடன் இணைந்து மொயினா முகைதீன் பேக் இசையமைப்பு இக்பால் ஆகியோ் இசை பாடினாா்கள்.




0 Comments