(அனா)
மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் தேசிய விவசாய உற்பத்தி மேம்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் ஏறாவூர் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் வலயத்தினுள் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வு பாடசாலைகள் தோறும் இன்று நடைபெற்றது.
இதன்போது ஏறாவூர் றகுமானியா வித்தியாலயம், ஏறாவூர் அல் முனிறா பாலிகா மகா வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி போன்ற பாடசாலை மாணவர்களுக்கு தேசிய விவசாய உற்பத்தி தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.கனகசுந்தரம், பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அஹமட் ஹாதி மற்றும் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் எனப் கலந்து கொண்டனர்.
0 Comments