ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு உதவிய செலிங்கோ லைஃப்

.
இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் சுமார் 2300 மாணவர்களுக்கு தொடராக பத்து கல்விக் கருத்தரங்குகளை நடத்தி செலிங்கோ லைஃப் அவர்களின் பரீட்சைக்கு மிகவும் பெறுமதியான முறையில் கைகொடுத்தது.

செலிங்கோ லைஃப்பின் திட்டங்களில் ஒன்றான பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் கல்விக்காக சேமிக்க கைகொடுக்கும் திட்டமான 'டிகிரி சேவர்' திட்டத்தின் மூலம் இந்தக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாரம்மல, நிக்கவரெட்டிய, தம்புத்தேகம, குருணாகல், கொழும்பு, கந்தானை, குளியாப்பிட்டிய, கல்கமுவ மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் அரை நாள் கருத்தரங்குகளாக இவை நடத்தப்பட்டன.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் இரண்டு நிபுணர்களான புத்தளம் கல்விப் பிராந்திய கல்வி ஆலோசகரும் மற்றும் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள வளவாளருமான குமாரதாஸ அபேரட்ண மற்றும் நாத்தாண்டிய தம்மீஸர தேசிய கல்லூரியின் பிரதி அதிபர் அணில் புஷ்பகுமார ஆகியோர் இந்தக் கருத்தரங்குகளின் போது தமது நிபுணத்துவத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

இந்த அனுபவம் மிக்க் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட அறிவூட்டலுக்கு மேலதிகமாக கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களும் 2017 புலமைப்பரிசில்களுக்கு தயாராவதற்கான ஏனைய குறிப்புக்களும் வழங்கப்பட்டன.

செலிங்கோ லைஃப் கடந்த பல ஆண்டுகளாக கல்வித் துறையில் மாணவர்களை ஊக்குவித்து விருது வழங்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. கம்பனியின் பிரணாம புலமைப்பரிசில் வெகுமதித் திட்டத்தின் கீழ் கம்பனி காப்புறுதிதாரர்களின் பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட  சாதனை படைக்கின்ற போதும், க.பொ.த சாதாரண தரத்தில் அவர்கள் சாதனை படைக்கின்ற போதும் க.பொ.த உயர்தரத்தில் முதலாம் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கின்ற போதும் பாராட்டி புலமைப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். அதேபோல் தேசிய ரீதியாக கல்வி சாராத துறைகளில் சிறந்து விளங்கும் பத்து பேரும் வருடாந்தம் கௌரவிக்கப்படுகின்றனர்.

2004 முதல் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் செலிங்கோ லைஃப் நிறுவனம் செயற்படு நிலையில் உள்ள சுமார் பத்து லட்சம் காப்புறுதிகளைக் கொண்டுள்ளது. செலிங்கோ லைஃப் உள்ளுர் காப்புறுதித் துறையில் புத்தாக்க கண்டுபிடிப்பு, உற்பத்தி சேவைகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்காக புகழ்பெற்ற ஒரு நிறுவனமாகும்.


Post a Comment

0 Comments