காத்தான்குடி வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

.


(எம்.ரீ. ஹைதர் அலி)
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியினால் போசனை மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் அவர்களினால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை அமைப்பதற்காக பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும் அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாக இந்நிகழ்வு வேறொரு தினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments