(அனா)
அண்மையில் வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் முதலாம் இடத்தினை வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயம் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் 24 மாணவர்கள் சித்தி பெற்று ஓட்டமாவடி கோட்டத்தில் முதலாம் இடத்தினை தட்டிச் சென்றுள்ளதுடன், கடந்த வருடமும் 26 மாணவர்கள் சித்திபெற்று முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.
புலமைப் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து கொள்வதுடன், இப்பாடசாலை அபிவிருத்தியிலும், கல்வியிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றமை பாராட்டத்தக்கது என்று பாடசாலை அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தெரிவித்தார


0 Comments