நாவிதன்வெளி பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பின்தங்கிய நிலையிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறுவேலைத்திட்டங்களை உலக தரிசன நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இதனடிப்படையில் உலக தரிசன நிறுவனத்தின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கான நிதியுதவியின் கீழ் நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளிலிருந்துஇவ்வாண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த 18 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ்மத்தியமுகாம் வேப்படித் தோட்டம் வாணி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூலக கட்டிடம் திறந்து மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. அத்துடன்மத்தியமுகாம் வேப்படித் தோட்டம் வாணி மகா வித்தியாலயம் மற்றும் வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும்பொருட்டு குடிநீர் இணைப்புக்களும் நீர்த்தாங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மத்தியமுகாம் வேப்படித் தோட்டம் வாணி மகா வித்தியாலயத்தின் அதிபர் பீ.யோகராசா தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர்எம்.எஸ்.எஸ்.நஜீம், சம்மாந்துறை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி வீ.நிதர்சினி, நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, உலக தரிசன நிறுவனத்தின் நாவிதன்வெளிபிரதேச முகாமையாளர் எஸ்.பி.பிரேமச்சந்திரன், அம்பாரை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம், உலக தரிசன நிறுவனத்தின் பிரதேச நிகழ்ச்சித் திட்டஉத்தியோகத்தர் ஏ.தனுராஜ் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியலாளர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.


0 Comments