பெஷன் பக் விருது வழங்கும் ரூ சித்தம் - 2017 வெற்றியாளர்கள் 65,000 விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 500 இளம் கலைஞர்களுக்கு பரிசுகள்

கொழும்பு, 21 ஒக்டோபர் 2017: இலங்கையின் முன்னணி நவநாகரிக ஆடை விற்பனை நிறுவனமான பெஷன் பக் நிறுவனத்தின், நாடு தழுவிய ரீதியிலான வருடாந்த சித்திரப் போட்டி, அண்மையில் இரண்டு கட்;டங்களாக இடம்பெற்றுள்ளன. இதற்கென 300 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 65,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற 'ரூ சித்தம்' பரிசு வழங்கும் விழா, இதுவரை காணாத அளவு விண்ணப்பங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வைபவத்தில் 500 சிறுவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 'ரூ சித்தம்' போட்டியானது, பாடசாலை மாணவர்களின் மறைந்துள்ள திறமைகளை அடையாளம் கண்டு, அதற்கு சிறந்த கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், பெஷன் பக் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு வேலைத் திட்டமான 'சிசு திரிமக' வின் வருடாந்த நிகழ்வாக இது இடம்பெற்று வருகிறது. இலங்கை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு இது பெரிதும் துணை புரிந்துள்ளது. கல்வி அமைச்சின் கலை திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த போட்டி எற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

'சுத்தமான இலங்கையை ஒன்றிணைந்து உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று வயதுப் பிரிவுகளிடையே 'ரூ சித்தம் 2017' இடம்பெற்றது. கட்புல மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர்கள் இந்தப் போட்டியின் நடுவர்களாகக் கலந்து கொண்டனர். இந்த வருடத்தில் புதிதாக 'விசேட தேவைகள் உள்ள சிறுவர்கள்' என்ற ஒரு பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது. இரத்மலானையிலுள்ள இலங்கை கட்புல மற்றும் செவிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஆசிரியர்கள் இதில் நடுவர்களாகக் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ரீதியிலான வெற்றியாளர்கள் பின்வருமாறு:

வயது 7 - 9
கொழும்பு - கே.எம்.சிந்துலி சதோகாமி
கண்டி - சந்தேரு பத்திரண


வயது 10 - 12
கொழம்பு - எம்.கெனுல் டில்மித் ஜயவீர
கண்டி - சனெத்மா திவங்கி மாறசிங்க

வயது - 13 - 16
கொழும்பு - திவாகர சுதில்பிரபா சூரியபண்டார
கண்டி - ஏ.எச்.எப்.ஷாமிலா

அகில இலங்கை ரீதியிலான வெற்றியாளர்கள், தங்களது ஓவியங்கள் அச்சிடப்பட்ட குடை ஒன்றைப் பரிசாகப் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், ரூபா 5,000 பெறுமதியான பரிசு வவுச்சர்கள், சைக்கிள்கள் உட்பட கிண்ணங்களும் வெற்றியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. சகல வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் என்பன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு பற்றிக் கருத்துத் தெரிவித்த பெஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளர் சபீர் சுபைன், 'வாழ்க்கையின் அனைத்து அழகிய தருணங்களுக்கும் பொருத்;தமான நாகரிகங்களை அறிமுகப்படுத்தும் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பெஷன் பக், எமது சமூகத்தின் அபிவிருத்தியையும் ஒரு முக்கிய அம்சமாகக் கருதுகின்றது' என்று தெரிவித்தார். எமது பிரதான சமூக அபிவிருத்தித் செயற்திட்;டமான 'சிசு திரிம' வேலைத் திட்டமானது, சகல சந்தர்ப்பங்களின் போதும் குறைந்த வசதிகளைப் பெறும் மாணவர்களுக்கு சமநிலையான வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதை எப்போதும் முதன்மையாகக் கருதுகின்றது. 'ரூ சித்தம்' இந்த அடிப்படையில் செயற்படும் ஒரு வேலைத் திட்டமாகும். இதன் மூலம், சிறுவர்களின் கலைத்திறனை ஊக்குவித்து, அவர்களின் ஆக்கபூர்வமான தன்மையை வளர்ச்சியடையச் செய்ய நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் பரிசளிப்பு விழாவில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் கௌரவ சுசில் பிரேம ஜயந்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கலைஞர்களான ரோஹண பெத்தகே மற்றும் சமில பீரிஸ் ஆகியோரும் இதில் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர். கண்டி நிகழ்வில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் கௌரவ அனுராத ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதம பொலிஸ் அதிகாரி திரு. எதிரிசிங்க மற்றும் கண்டி வலயக் கல்வி அலுவலகத்தின் வலயப் பணிப்பாளர் எம்.டப்ளியூ.விஜேரத்ன அகியோரும் இதில் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments