நான்கு சபைகளாக பிரிப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகளும் உடன்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதி இறுதி கூட்டம்
அரசியல் கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் கருத்து வருமாறு:

பிரதியமைச்சர் ஹரீஸ்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகளுக்கமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். இந்தப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பது அவசியம். மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். அந்த நோக்கத்துடன் இரண்டு பகுதிகளுக்கும் ஏற்புடையதொரு தீர்ப்பு ஏற்படுத்துவதற்காக நாங்கள் தொடர்ந்து விரைவில் கூடுவோம்.
தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் கல்முனையை நான்காக பிரிப்பதென்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்தை இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழ் பிரதிநிதிகள் ஐந்து பேரும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஐந்து பேரும் எதிர்வரும் வாரங்களில் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சி செய்கின்றோம். சகல தரப்பினர்களினதும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்டு ஒரு இணக்கமான தொரு கொள்கை ரீதியான தீர்வாக 4 உள்ளுராட்சி சபைகளையும் கல்முனையில் உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறை சாத்தியமான பேச்சுவார்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். என ஹரீஸ் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ஆசாத் சாலி தேசிய ஐக்கிய முன்னனி தலைவர்.
இது சாய்ந்தமருது மக்களுக்கு நடந்த அநியாயம் இது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவகாரத்தை அரசியல்மயப்படுத்தியது. பிரதமரை அங்கு அரழைத்துச்சென்று சாய்ந்தமருதுக்க ஒரு பிரதேச சைபயை தருவதாக நம்பிக்கையளித்தார்கள். என்னுடைய இயக்கமே இதனை வழங்கும் என பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கூறினார். கல்முனையை நான்காக பிரிப்பதாக இரந்தால் தமிழ் மக்களுக்கும் ஒரு சபையை தாருங்கள் என கோரிக்கையை விடுத்தார்கள். அதில் நாம் உடன்பட்டொம். இதற்கு கால அவகாசம் போடக்கூடாதென ஹரீஸ் சொல்ல இல்லை கால அவகாசம் போட வேண்டும் என நாம் கூறினோம். இங்கு யாரக்கும் பாதகமில்லாமல் சுமுகமான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வெண்டும் என்ற நோக்கிலேயே அனைவரும் உள்ளார்கள். இதனை அரசியல்மயப்படுத்தாமல் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் இப்பிரச்சினை சென்றிருக்காது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்பகுதி மக்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி வைத்ததென்பதை சொல்ல வெண்டும் என்றார் அவர்.
கோடீஸ்வரன் எம்.பி
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்த்திற்கச எந்தவகையிலும் தமிழர்கள் எதரிப்ப்பில்லை. அதேநேரம் ஏனைய பிரதேச சபைகள் அல்லத நகர சபைகள் உருவாக்க வேண்டும் என்றால் தமிழர்களின் பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு நகர சபையை உரவாக்க வெண்டும். அதில் தமிழ் பிரதேசங்களையும் தமிழ் இடங்களையும் உள்ளடக்கியதான ஒரு நகர சபையை உருவாக்கவே நாம் முன்மொழிந்துள்ளோம். இதை தவிர நாம் ஒரு சபை அல்ல எத்தனை சபை உருவாக்கினாலும் பிரச்சினையல்ல. நாம் ஒரு சபையையே வேண்டுகின்றோம். ஒரு நகர சபை. அது தமிழ் பிரதேசங்களை ஒள்ளிடக்கியதான ஒரு நகர சபை உரவாக்கப்பபடும் போதே தமிழர்களின் கலையும் கலாசாரமும் அதில் பாதுகாக்கப்படும். எமது உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைய முடியும். நாங்கள் எங்களுக்கொரு சபையை கெட்கவில்லை.ஆனால் நான்கு சபையாக முன்வைக்கப்படும்பொதே நாம் எங்களுக்கொரு சபையை வேண்டுகின்றோம். எமது முன்மொழிவை ஏற்றுக்கொண்டார்கள். சாய்ந்தமருதை கொடுப்பதில் எமக்கு நூறு வீத உடன்பாட உள்ளது. சாய்ந்தமருது வழங்கவதால் 70 வீதம் முஸ்லிம், 30வீதம் தமிழர்கள் இருப்பது 60 வீதம் முஸ்லிம் 40 வீதம் தமிழர்களாக மாறிடுவார்கள் என்கின்ற எண்ணக் கருவுக்கு அமையவே இதனை ஒரு அரசியல் நோக்கத்திற்காக சாய்ந்தமருது பிரிக்கப்பட கூடாதென சொல்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா
கல்முனையை நான்கு பிரிவுகளாக பிரிப்பதற்கு நாம் உடன்பட்டோம். இப்பொழுது மிக குறுகிய காலத்திற்குள் நான்கை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை ஆராய்வார்கள். நான் அமைச்சராக இருந்த போது நான் பிரித்த அந்தக் குறிப்புக்களை பரிசீலிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. நான் இருந்த பொது அதனை வழங்குவதற்கான வர்த்தமானி அனுப்பயிருந்த விடயத்தை இன்று அமைச்சரிடம் தெளிவாக பகிரங்கமாக கூறியுள்ளேன். நான் அந்த ஆவணங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வழங்கியுள்ளேன் என்றார்.

0 Comments