கொமர்ஷல் வங்கியின் யுவுஆ வலையமைப்பில் இவ்வாரம் புதிய மைல் கல்; எட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மாஸ் இன்டிமேட்ஸ் விடியலில் 700 வது
ATM வலையமைப்பு இயந்திரத்தை தொடக்கி வைத்துள்ளதன் மூலம் இந்தப் புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள
ATM இன்சூரன்ஸ் கூட்டாண்மை அலுவலகம், பண்டாரகமவில் உள்ள லாஃப்ஸ் இன்தான பொழுது போக்கு பூங்கா என்பனவற்றில் கொமர்ஷல் வங்கி
ATM இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதன் தொடராகவே இந்த 700வது இயந்திரமும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியின்
ATM வலையமைப்பானது தான் இலங்கையில் தனியார் வங்கி ஒன்றினால் நடத்தப்பட்டு வரும் மிகப் பெரிய
ATM வலையமைப்பாகும். இந்த நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு, கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடம் போன்ற தேசிய ரீதியான கொண்டாட்ட காலப்பகுதிகளில் ஆகக் கூடுதலான தொகை பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ள வலையமைப்பாகவும் இது காணப்படுகின்றது.
உதாரணத்துக்கு இவ்வாண்டு ஏப்பிரல் மாதத்தின் முதல் 14 தினங்களிலும் வங்கியின் யுவுஆ வலையமைப்பானது 23.9 பில்லியன் என்ற மிகப் பெரிய தொகையை அப்போதைய தனது 658 யுவுஆ இயந்திர வலையமைப்பின் ஊடாக மக்களுக்கு வழங்கியுள்ளது.
2016 நடுப்பகுதியில் இந்த வலையமைப்பை நுஆஏ சிப் ஆற்றல் கொண்ட வலையமைப்பாக மாற்றும் திட்டத்தை வங்கி பூர்த்தி செய்துள்ளது. இந்த நுஆஏ தரமானது மோசடிகளைத் தடுக்கும் அதி உயர் ஆற்றல் கொண்டது. இதன் அடிப்படையில் கொமர்ஷல் வங்கியின் ஒவ்வொரு
ATMஇயந்திரமும் தற்போது ஐஊ தரவு மற்றும் காந்த கோடு தரவு என்பனவற்றை உள்வாங்கி செயற்படுகின்றது.
வங்கியின் யுவுஆ வலையமைப்பில் 20மூ த்துக்கும் அதிகமானவை, அதன் கிளைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. கைத்தொழில் வலயங்கள், ரயில் நிலையங்கள், மத்திய பஸ் தரிப்பிடம், மாடி வீட்டு வதிவிடத் தொகுதிகள், பொருள் கொள்வனவு தொகுதிகள், பாரியஅளவிலான தொழிற்சாலைகள் என்பன இவற்றுள் அடங்கும். இது வாடிக்கையாளர்களுக்கு தமது பணப்பரிமாற்றத்துக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளன.
பண மீளப் பெறுகைக்கு வசதியாக வங்கியின் யுவுஆ இயந்திரங்கள் அமைந்துள்ள அதேவேளை அதற்கு மேலதிகமாக மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம், டயலொக், மொபிடெல், எடிசலாட், ஹட்ச், லங்கா பெல் வலையமைப்புக்களுக்கான கட்டணம் ஆகிய வசதிகளோடு 24 மணிநேரமும் 365 நாட்களும்; கொமர்ஷல் வங்கியின் கிரடிட் கார்ட் கட்டணத்துக்கான வசதி என்பனவற்றையும் கொண்டுள்ளது. வங்கியின் இந்த வலையமைப்பானது உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான யுவுஆ வலையமைப்புக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியின்
Master Card>
Maestro> Cirrus>
Visa> Plus> Amex>
Union Pay, Discover> Diner’s
Club>, என இன்னும் பல வலையமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவதால் இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தமது வெளிநாட்டுக் கணக்குகளில் இருந்து பணத்தை மீளப் பெற்று இலங்கையில் பயன்படுத்தவும் உதவுகின்றது.
வங்கியின் 600வது யுவுஆ வலையமைப்பு கொழும்பு கோல்ட் சென்டரில் அமையப் பெற்றது. 500வது இயந்திரம் மருதானை ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. 400வது இயந்திரம் வங்கியின் ருவன்வெல்ல கிளையில் உள்ளது.
கொமர்ஷல் வங்கியின் யுவுஆ மற்றும் டெபிட் கார்ட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் ரூபா வரையில் தினசரி யுவுஆ இல் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு விற்பனை புள்ளி நிலையங்களில் பொருள் கொள்வனவுக்காக இரண்டு லட்சம் ரூபா வரையில் செலவிடலாம். இது தவிர தங்களது வசதிகள் மற்றும் தேவைகளுக்கு எற்ப இந்தத் தொகைகளை வாடிக்கையாளர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.
ஏழு வருடங்களாக தொடர்ந்து உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 256 கிளைகளுடன்;, செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் 25க்கும் அதிகமான பிரதான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இலங்கையின் தலைசிறந்த வங்கி, மிகச் சிறந்த வர்த்தக வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி, என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை முழு அளவில் 55மூ பங்குரிமையுடன் வங்கி திறந்துள்ளது. நவம்பர் 2016ல் முழு அளவிலான பணப்பரிமாற்ற சேவைகளை மேற்கொள்ள இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி அனுமதியைப் பெற்றுள்ளது.
(முற்றும்)
படவிளக்கம் : கொமர்ஷல் வங்கி மற்றும் மார்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் என்பனவற்றின் பிரதிநிதிகள் வங்கியின் 700வது யுவுஆ இயந்திர செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்
0 Comments