சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்தும் வகையில்Biz Club ஐ அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி


இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SME)  மிகப் பெரிய அளவிலான நிதி உதவிகளை வழங்கும் கொமர்ஷல் வங்கி இந்தப் பிரிவைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு விரிவான வலையமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கிலும் ஏனைய பல நன்மைகளை வழங்கும் வகையிலும் Biz Club  ஐ (வர்த்தக கழகத்தை) அறிமுகம் செய்துள்ளது.

இந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்வகை கழகங்களில் இது முதலாவதாகும். புதிய வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் (SME)  வாடிக்கையாளர்களை ஒருங்கிணைப்பதில் இந்தப் புதிய Biz Club  கவனம் செலுத்தும். அதன் மூலம் கடன் வழங்கலுக்கு அப்பாற்பட்ட ஆதரவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இந்த Biz Club அறிமுகம் பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ.;ரெங்கநாதன் 'வளர்ந்து வரும் எமது வர்த்தக அமைப்புக்கள் எமது பொருளாதாரத்துக்கு செலுத்தி வரும் அளப்பரிய பங்களிப்பை கொமர்ஷல் வங்கி நன்கு உணர்ந்துள்ளது. வருங்காலத்தில் இந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளே நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சி அடையவுள்ளன. இன்றைய வளர்ச்சி அடைந்து வரும் வர்த்தக நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைப்பதும் அவற்றை உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களோடு தொடர்பு படுத்தும் ஒரு முயற்சிதான் இந்த Biz Club  அத்தோடு ஒரே விதமான சிந்தனை கொண்ட சமூகத்தோடு தொடர்பு படுவதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கவும் இது வழியமைக்கின்றது. தேசிய பொருளாதாரத்துக்கு (SME)  க்கள் வழங்கும் அளப்பரிய பங்களிப்பை அங்கிகரித்து கௌரவிப்பதும் எமது நோக்கமாகும்' என்றார்.
நான்கு வகை அங்கத்துவங்கள் இதில் வழங்கப்படவுள்ளன. பிரீமியர், பிளேட்டினம், தங்கம் மற்றும் வெள்ளி என அங்கத்துவம் அமையவுள்ளது. வௌ;வேறு (SME)  வாடிக்கையாளர் தேவைகளை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான வித்தியாசமான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் நோக்கில் இந்த அங்கத்துவ வகைப்படுத்தல் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவுக்கும் தேவையான உதவிகளை முறைப்படி வழங்க இது உதவியாக அமையும். அத்தோடு இந்த வர்த்தக முயற்சிகளை வலுவூட்டி அவற்றை மேம்படுத்தவும் இந்த வகைப்படுத்தல் உதவியாக அமையும்.

Biz Club மூலம் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விஷேட வங்கிச் சேவைகளையும் பிரத்தியேகமான டெபிட் மற்றும் கிரடிட் கார்ட்டுகளையும் பெற்றுக் கொள்ள முடியும். புதிய வர்த்தக முயற்சிகள் மற்றும் பொருhதாரம் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் தரவுகளையும் இந்த வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். அவசர தகவல்கள், ஈமெயில், குறுந்தகவல் என்பன மூலம் இந்தத் தகவல்களைப் பெற முடியும். அத்தோடு இணையத்தள வங்கி வசதிகளுக்கான இலவச பதிவுகளையும் செய்து கொள்ள முடியும். இந்த வாடிக்கையாளர்கள் வங்கி மூலம் கடனுக்காக விண்ணப்பிக்கின்ற போது விரிவான திட்ட அறிக்கையோ அல்லது கடன் முன்மொழிவுகளையோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேவையும் இருக்காது.
இவற்றுக்கு மேலதிகமாக Biz Club  வாடிக்கையாளர்களுக்கு இலவச நிதி ஆலோசனைகள் பிரத்தியேகமான வர்த்தக கருத்தரங்குகளுக்கான அழைப்புக்கள் என்பனவும் வழங்கப்படும். அவர்களின் வர்த்தக அபிவிருத்திக்கு இவை மிகவும் பக்கபலமாக இருக்கும்.
ளுஆநு க்களுக்கான வங்கியின் நிதிக் கல்வித் திட்டம் நிதிக் கற்கைகள் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். அத்தோடு உற்பத்திக்குத் தேவையான சுற்றாடல் சிநேகபூர்வ வழிமுறைகள், கழிவு முகாமைத்துவம், சக்தி பாதுகாப்பு என்பன பற்றியும் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்.
அவர்களின் பிரத்தியேகமான டெபிட் அட்டைகள் மூலம் ஹோட்டல் பதிவுகளின் போது விஷேட கழிவுகளையும், கடல்கடந்த பயணங்களின் போது வட்டியற்ற கொடுப்பனவு முறைகளையும், தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்களிடம் இருந்து கழிவு வவுச்சர்களையும், மெக்ஸ் லோயல்டி வெகுமதிகளையும், கொமர்ஷல் வங்கி கார்ட்டுகளை வைத்திருப்பவர்கள் அனுபவிக்கும் ஏனைய எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த Biz Club  ஐ ஆரம்பிக்க முன்னரே கொமர்ஷல் வங்கி நாட்டின் பல பாகங்களிலும் ளுஆநு வாடிக்கையாளர்களுக்கு தேவையான கல்வியூட்டல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இதுவரை இத்தகைய 61 கல்வி நிகழ்ச்சிகளை வங்கி நடத்தியுள்ளது. இவற்றால் சுமார் 5500 தொழில்முயற்சியாளர்கள் நன்மைகளை அடைந்துள்ளனர். மே 2016 இலும் மார்ச் 2017 இலும் மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் வங்கி விஷேடமாக பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான விஷேட கருத்தரங்குகளை நடத்தி உள்ளது. 300க்கும் அதிகமானவர்கள் இவற்றில் பங்கு பற்றினர். தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை (NEDA)  இவற்றுக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளது. வெற்றிகரமான பெண் தொழில்முயற்சியாளர்களை இனம் கண்டு கொள்வதில் அது முக்கியமான பங்களிப்பை வழங்கியது.

வங்கி 15 விவசாய மற்றும் நுண் நிதி பிரிவுகளை (AMFUs)) நாடு முழுவதும் நிறுவியுள்ளது. தமது விவசாய மற்றும் நுண் நிதி பிரிவுகளில் விஷேட உதவிகள் தேவைப்படுகின்றவர்களை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் இந்தப் பிரிவுகள் அர்ப்பணத்தோடு செயற்பட்டு முக்கிய பங்காற்றி வருகின்றன. இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுரம், கிளிநொச்சி, பண்டாரவளை, வெள்ளவாய, ஹிங்குராக்கொட, கலேவெல, அச்சுவேலி, வவுனியா, காத்தான்குடி, திஸ்ஸமகாராம, நெலுவ மற்றும் பொத்துவில் ஆகிய பகுதி கிளைகளில் இந்த பிரிவுகள் செயற்படுகின்றன.

படவிளக்கம் :கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம் (வலது) பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.ரெங்கநாதன், பிரதி பொது முகாமையாளர் தனியார் வங்கிப் பிரிவு சன்றா வெல்கம, ஆகியோர் கொமர்ஷல் வங்கி Biz Club  வாடிக்கையாளர்களுக்கு விஸா டெபிட் கார்ட் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.

Post a Comment

0 Comments