சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை அரசியல் வாதிகளின் நிதி வேண்டாம் என பேரணியும் : கையயெழுத்து வேட்டையும்

(நமது நிருபர்)
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை எந்தவொரு அரசியல்வாதியினதும் அபிவிருத்திற்கான பணங்களை சாய்ந்தமருது பிரதேச பிரிவில் பயம்படுத்தக் கூடாது என வலியுறுத்தி இன்று ஜும்ஆ தொழுகை தொடாந்து பேரணி இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதியுடாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினை சென்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஆகியோருக்கு சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி மன்றத்தினை வலியுறுத்தி கையழுத்து வேட்டை சாய்ந்தமருது மாளிகைக்காடு அனைத்து பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அனைத்து பள்ளிவாலிக்கு முன்பாக இன்று நடைபெற்றது.








Post a Comment

0 Comments