(அனா)
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் எப்.பி.மதன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு ஓட்டமாவடி பிரதான வீதி, வாழைச்சேனை ஹைராத் வீதி, வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் வீதி, வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையை சென்றடைந்தது.
இவ்விழிப்புணர்வு பேரணியில் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் மற்றும் நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான வீதி நாடகம் வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது.
அத்தோடு நோய் தொடர்பாக விழிப்புணர்வு பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.
நீரிழிவு நோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கு புதன்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்து நோயை குணப்படுத்த முடியுமென வைத்தியட்சகர் எப்.பி.மதன் தெரிவித்தார்.






0 Comments