சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தை பிரகடனப்படுத்த கோரி மாட்டு வண்டியில் கவனயீர்ப்பு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றது. இப்பேரணி சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலிக்கு முன்பாக ஆரம்பமாகி சாய்ந்தமருதின் அனைத்து பிரதான வீதிகளிடன் ஊடாகவும், கடற்கரை வீதி வழியாகவும் வலம் வந்தது.
இதன்போது மாட்டு வண்டி உரிமையாளர்கள், இளைஞர்கள், பொது மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிகள், பள்ளிவாசல்களின் பிரதிநிகள், உலமாக்கள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.





0 Comments