(எம்.எம்.ஜபீர், எம்.எஸ்.எம்.சிஹாப்)
நாவிதன்வெளி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவும் வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்துடன் இணைந்து தையல் பயிற்சி நிலைய மாணவர்களின் உற்பத்தி திறன் கண்காட்சி நேற்று நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற உற்பத்திறன் கண்காட்சியில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உற்பத்திறன் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்
நாவிதன்வெளி பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தார் ஏ.வீ.எம்.சரீப், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.மோகனகுமார் நிர்வாக உத்தியோகத்தர் ரி.கமலநாதன், மாணவர்கள், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யுவதிகளினால் செய்யப்பட்ட பாரம்பாரிய கைப்பணிப் பொருட்கள், ஆடைகள், கலாச்சார உணவு வகைகள், நவீன ஆடைகள், வீட்டுக்கு தேவையான ஆடம்பர மற்றும் அலங்கார பொருட்கள் என பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
0 Comments