வடமாகாண பொலிஸாரின் விடுமுறை இரத்து-சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்


வடமாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து விடுமுறையில் சென்ற பொலிஸார் அனைவரினதும் விடுமுறை, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் பூதாகரமாகியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் மாவீரர் தின அனுஷ்டிப்பை கருத்திற்கொண்டே, பொலிஸாரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Post a Comment

0 Comments