சொறிக்கல்முனை வழுக்கமடு ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட சொறிக்கல்முனை வழுக்கமடு ஆற்றில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக ஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக பயன்படுத்திய இரண்டு டிப்பர் வாகனமும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சம்மாந்துறையைச் சேர்ந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்களையும் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய  மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments