பெற்றோல் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விநியோகம் வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங் அவர்களின் கீழ் 2017/01 இலக்க சுற்றுநிரூபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எல்லா எரிபொருள் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல்
பெற்றோல் எரிபொருள் விநியோகம் தொடர்பாக
நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எண்ணைக் கப்பல் திரும்பி அனுப்பிவைக்கப்பட்டதால் பொதுமக்களின் தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியநிலை காணப்படுகின்றது.
போலி வாந்தி மற்றும் செய்திகளால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை முழுஅளவிள் எரிபொருள் நிரப்ப ஆரம்பித்தனர். இதனால் எரிபொருளுக்கான அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பெற்றோலை போதல்களிலும் கேன்களிலும் கொள்வனவு செய்கின்றனர்.; நாங்கள் தொடர்ந்து பெற்றோலை விநியோகம் செய்து வருகின்றோம். ஆனால் பொதுமக்கள் வரிசையை குறைக்க முடியவில்லை. இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை.
எனவே பெற்றோல் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எரிபொருளை போத்தல்களுக்கோ மற்றும் கேன்களுக்கோ விநியோகிக்க வேண்டாம் என்றும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்க வேண்டும் என்று. அவர்கள் இந்த சுற்று நிரூபத்திற்கு எதிராக செயற்பட்டால் அதற்கான விளைவை பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றேன்.
அதேவேளை, நான் எற்றுக்கொள்கின்றேன் உங்களது ஒத்துழைப்பாள் மக்களின் எரிபொருள் தேவை பூர்த்தியடைகின்றமை தொடர்பாக. மேலும் இந்த சுற்று நிரூபம் தொடர்பான தகவலை அனைத்து தொழிலாளர்களுக்கும் தெரிவிக்குமாரு நான் விரும்புகின்றேன்.
0 Comments