உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தின் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில்சாய்ந்தமருது பிரகடனம் வாசிக்கப்பட்டது.
கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதயில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக பெரும் திரளான பொது மக்கள் கூடி வீதியை மறித்து சாய்ந்தமருது உலமா சபை தலைவர் எம்.எஸ்.எம்.சலீமினால் வாசிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரகடத்தை ஏற்றுக் கொண்டு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களின் கொடும்பாவிகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருது வீட்டுக்கு பாதுகாப்புக்கு இருந்த பொலிசாரை நோக்கியும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.





0 Comments