ஹம்பாந்தோட்டை வெளியத்தவையில் ருஹூனு புர இளைஞா் படை முகாம்

(அஷ்ரப்  ஏ சமத்)

ருஹூனு புர இளைஞா்கள் 1800 பேர் கலந்து கொண்ட  இளைஞா் படை முகாம்  நேற்று (3) ஹம்பாந்தோட்டை வெளியத்தவையில் இளைஞா்  சேவையின் தலைவா்  சட்டத்தரணி  ஏரந் வெலிங்க தலைமையில் நடைபெற்றது.

  பிரதம அதிதியாக  இளைஞா் விவகார அமைச்சா் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கலந்து  கொண்டாா்.  இப்  பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெறுகின்றது.  இந் நிகழ்வில் இளைஞா் கள்  தத்தமது  தொழில்.கல்வி உயாகல்வி தத்தமது  பிரதேச பிரச்சினைகள் பற்றி  பிரதமா்முன் கேள்விகளை தொடுத்தனா். பிரதமா் அக் கேள்விகளுக்கு பதில்களையும் தீர்வையும் பெற்றுக் கொடுத்தாா்.

்இவ் வைபவத்தில்  அமைச்சா் சஜித் பிரேமதாசா, மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சா் துலிப் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.  



Post a Comment

0 Comments