களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு மற்றும் கோட்டைக்கல்லாறு மேற்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவும் நடைபெற்றது.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்த கோட்டைக்கல்லாறு கண்னகி அம்மன் கோயில் வீதி கிராமிய பொருளாதார அமைச்சின் பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு வேலைக்கான ஆரம்ப நிகழ்வு அமைச்சின் இணைப்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
அத்தோடு கோட்டைக்கல்லாறு மேற்கு பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா மாதர் சங்க இணைப்பாளர் எஸ்.சந்திரிக்கா தலைமையில் இடம்பெற்றது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் ஆறரை இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதியமைச்சரின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.கண்ணன், திருமதி.ஜெ.மீனா, பிரதேச பிரமுகர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments