(ஏ. முஹம்மத் பாயிஸ்) மத்தியில் குவிக்கப்பட்டிருந்தஅதிகாரங்கள் மக்களின் பங்கேற்பிற்காகமாகாணம் மற்றும் பிரதேசங்களுக்குப் பகிரப்பட்டிருக்கின்றது. மக்கள் ஆட்சியில் நேரயாகப் பங்கேற்கும் ஒருபொறிமுறைதான் உள்ளுராட்சிமன்றங்களாகும். இதில் மக்கள் தமதுபிரதேசஅபிவிருத்திமற்றும் தேவைகளைஅப்பிரதேசவளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்பதிட்டங்களைவகுத்துஅதில் பங்கேற்கிறார்கள். நிலப்பரப்பில் பெரியதொருஎல்லையைஅல்லதுசனத்தொகையில் அதிகளவைக் கொண்டிருக்கின்றபோதுஉள்ளுராட்சிமன்றங்கள் நிர்வாகத்தை,வேலைத்திட்டங்களைமுன்னெடுப்பதில் சிரமங்களைஎதிர்நோக்கநேரிடுகின்றஅதேவேளைஅவ்வதிகாரஎல்லைக்குட்பட்டமக்களும் அவ்வாட்சிசெயற்பாட்டிலிருந்துபோதியளவுபயனைஅடையமுடியாதுகஷ்டப்படுவதும் வழமையானவிடயமாகும். இதனால் ஒருபகுதியினர் அவ்வதிகாரஎல்லையிலிருந்துபிரிந்துதம்மைத் தாம் ஆழும் ஒருஏற்பாட்டைஉருவாக்கிக் கொள்ளும் முடிவுக்குஈற்றில் தள்ளப்படுகின்றனர்.
இது தான் கல்முனைமாநகரசபையிலிருந்துசாய்ந்தமருதுதனிப்பிரதேசசபையைக் கோருவதற்கானகாரணங்களுள் ஒன்றாகும். வேறுகாரணங்கள் இருப்பினும் அடிப்படையில் இது ஒருபிரதானகாரணமாகவே இருக்கின்றது.
கல்முனைமாநகரசபையில் கல்முனை,சாய்ந்தமருது,நற்பிட்டிமுனை, இஸ்லாமபாத்,கல்முனைக்குடி,பெரியநீலாவனை,மருதமுனை,பாண்டிருப்பு,துரைவந்தியமேடு,சேனைக்குடியிருப்பு,மணல்சேனைஆகியபிரதேசங்களும் கல்முனை முஸ்லிம்,கல்முனைத் தமிழ்,சாய்ந்தமருதுஆகியபிரதேசசெயலகப் பிரிவுகளும் காணப்படுகின்றன.
சுhய்ந்;தமருதுபிரதேசம் 190 வருடங்கள் பழமைவாய்ந்தகிராமமாகும். 9 சதுரமைல் நிலப்பரப்பைக் கொண்டது. இது 29,825 சனத்தொகைப் பரம்பலைக் கொண்டதுடன் 18,720 வாக்காளர்களையும் கொண்டுள்ளது. இப்பிரதேசம் கல்முனைபிரதேசசெயலகத்துடனேயே இணைக்கப்பட்டிருந்தது. 2001 ஆம் ஆண்டிலிருந்துசாய்ந்தமருதுதனிப்பிரதேசசெயலகமாகஆக்கப்பட்டது. ஆனால் இதற்கானகோரிக்கைமிகநீண்டகாலமாகமுன்வைக்கப்பட்டுவந்தது.
இருப்பினும் கடந்த 2010 ஆம் ஆண்டுநடைபெற்றகல்முனைமாநகரசபைக்கானதேர்தலில்தான் சாய்ந்தமருதுக்கானஉள்ளுராட்சிமன்றத் தேவைமெல்லவலுக்கத் துவங்கியது. இத் தேர்தலில் மு.கா. சார்பாகபோட்டியிட்டவேட்பாளர்களுள் பிரதானவேட்பாளர்களாககல்முனையில் சட்டத்தரணிநிசாம் காரியப்பர் மற்றும் சாய்ந்தமருதில் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் இருந்தனர். ஆனால் கட்சியால் மேயர் வேட்பாளர் யாரெனஅறிவிக்கப்படாதநிலையில் இவர்கள் இருவருக்குமிடையேபலத்தபோட்டிநிலவியது. இந்நிலையில் சாய்ந்தமருதுமக்கள் காலம் காலமாககல்முனையைச் சேர்ந்தஒருவர்தான் மேயராகவருதைத் தவிர்த்துசாய்ந்தமருதைச் சேர்ந்தஒருவரைமேயராக்கவேண்டும் என்றும் அவர் மூலமாகதமதுஊரின் தேவைகளைநிறைவேற்றவேண்டும்என்றஎதிர்பார்ப்பிலும் அத்தேர்தலில் சிராஸ் மீராசாஹிபுக்குஅதிகவிருப்புவாக்குகளைஅழித்துவெற்றிபெறச் செய்தார்கள். இருந்தாலும் விருப்புவாக்கில் இரண்டாம் நிலையிலிருந்தசட்டத்தரணிநிசாம் காரியப்பருக்குகல்முனைமாநகருக்கானமேயர் பதவியைவழங்கசில முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதையடுத்துசாய்ந்தமருதுமக்கள் வெகுண்டெழுந்ததால் வேறுவழியில்லாமல் மீண்டும் சிராஸ் மீராசாஹிபுக்குமேயர் பதவியைமு.கா. வழங்கியது. அப்போதுகல்முனைமாநகர சபைஓரளவுசுருசுருப்பாக இயங்கியதுடன் சிலவேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவந்தன. ஆனாலும் சிராஸின் இரண்டுவருடபதவிக்காலநிறைவின் பின் மீண்டும் மேயர் பதவிப் பிரச்சினைமேலெழுந்தது. அப்பதவியைசட்டத்தரணிநிசாம் காரியப்பருக்குவழங்குவதற்குசிராஸை பதவியிலிருந்து இராஜினாமாசெய்யுமாறுமு.கா. தலைமையால் பணிக்கப்பட்டார். சிலமறுப்புகளின் பின்னர் சிராஸ் தனதுபதவியை இராஜினாமாசெய்தார். சட்டத்தரணிநிசாம் காரியப்பர் மேயராகினார். ஆனால் சாய்ந்தமருதுமக்கள் வாக்களித்ததுசிராஸூக்கு இரண்டுவருடங்களைத்தான் வழங்கவேண்டும் என்தற்காகவல்ல. மக்கள் தமதுஅபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காகவேஆகும். ஆனால் மு.காவும் அதனதுதலைமையும் வாக்களித்தமக்களின் எதிர்பார்ப்பைஅலட்சியம் செய்துதனதுசுயவிருப்புவெறுப்புக்களைநிறைவேற்றியது. விளைவுஏமாற்றப்பட்டமக்களாகமனமுடைந்துபோனசாய்ந்தமருதுமக்கள் தம்மைத் தாம் ஆள்வதற்கானஓர் உள்ளுராட்சிசபையின் தேவையைமேலும் உணரத் தொடங்கினர். இச்சம்பவம் கல்முனைமாநகரசபையிலிருந்துபிரிந்துதனியொருஉள்ளுராட்சிசபையைஉடநடியாகக் கோரும் நிலைக்குஅவர்களைத் தள்ளியதுஎன்றேகொள்;ள வேண்டும். கடந்தகல்முனைமாநகர சபை ஆட்சிவிடயத்தில் ஜனநாயகத் தேர்வுக்குஎதிராகவேமு.கா. வின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தொடர்ந்தும் ஒருஊரின் தலைமைக்குமாத்திரம் கட்டுப்படுவதற்குஅல்லதுஒருசிலரேதொடர்ந்தும் ஆட்சிபீடம் ஏறுவதற்குமு.கா.வும் அதன் தலைமையும் துணைபோவதனைகடந்தகாலகல்முனைமாநகர சபை விடயத்தில் கண்டோம். இதன் விளைவுதான் சாய்ந்தமருதுமக்களின் தனியானஉள்ளுராட்சிக் கோசம் மிகவும் எழுச்சிபெற்றது. அதுமட்டுமல்லசாய்ந்தமருதுக்குதனியானபிரதேசசபையைப் பெற்றுத் தருவதாகஅரசியல் தலைவர்கள் பகிரங்கமாகவாக்குருதிகளும் அழித்தனர். மு.கா.வின் கல்முனைத் தொகுதிஎம்.பி. எச்.எம்.எம். ஹரீஸ் பகிரங்கமாகவேசாய்ந்தமருதுக்குப் பிரதேசசபையைப் பெற்றுத்தருவதற்குஒத்துழைப்புத் தருவதாகவும் ஆதரவுவழங்குவதாகவும் தெரிவித்தார். அதைவிடமேலாகமு.கா.வின் தலைமைசாய்ந்தமருதுக்குதனியானஉள்ளுராட்சிசபையைப் பெற்றுத் தருவதாகவாக்குறுதியளித்தது. அதுவும் போதாதுஎன்றுமு.கா.வினர் பிரதமரைக் கூட்டிவந்துஅவரூடாக இந்தமக்களுக்குவாக்குறுதியளித்தது. இன்னும் அ.இ.ம.கா. தலைவர் ரிசாத் பதியுத்தீன் கூட இவ்வாறானவாக்குறுதியைமக்கள் முன் சொறிந்தார். ஈற்றில் இவர்களில் சிலர் சாய்ந்தமருதுக்குஉள்ளுராட்சி சபை கிடைப்பதற்குதடையாக இருந்தார்கள். சிலரால் அதைப் பெற்றுக் கொடுக்கமுயற்சித்தோம்: ஆனால் முடியாமல் போய்விட்டதுஎன்றுகாரணம் ஒப்புவித்தனர். இவர்களின் செயற்பாட்டால் மிகவும் நம்பிக்கையோடு இருந்தசாய்ந்தமருதுமக்கள் ஏமாற்றமடைந்துவிட்டதாகஉணர்ந்துகடந்த இரண்டுவாரங்களுக்குமுன்னர் களத்தில் இறங்கினர். மூன்றுநாட்கள் வீதியில் நின்றுஜனநாயகப் போராட்டத்தைமுன்னெடுத்தனர். இம்மக்களின் போராட்டத்தைமழுங்கடிப்பதற்காககல்முனைமக்கள் நான்காகப் பிரிக்கவேண்டும் என்றகோரி;க்கையை இறுதியில் முன்வைக்கின்றனர். இக்கோரிக்கைகல்முனைமக்களால் ஏலவேமுன்வைக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அப்போதேஅதனைநான்காகப் பிரிப்பதற்கானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இறுதியில் எதுவிதமானமுடிவும் இல்லாமல் தேர்தலுக்கானஅழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதால் சாயந்;தமருதுக்கானதனியானபிரதேச சபை கிடைக்கவுமில்லை: கல்முனைமாநகர சபை நான்காகப் பிரிக்கப்படவுமில்லை. கிழக்கு முஸ்லிம்களிடையேஅதிகசெல்வாக்குடையகட்சிமு.கா. ஆனால் இக்கட்சிக்குதமக்குஆதரவுவழங்கும் மக்களைவழிநடத்தத் தெரியவில்லைஎன்பதுகல்முனைமாநகர சபை விடயத்தில்மக்களுக்குபுலப்படுத்தியிருக்கிறது. மக்களுடையதேவையைஉணர்ந்து இக்கட்சிசெயற்படவில்லை. ஏலவேகிழக்கு முஸ்லிம் பிரதேசங்களிடையே இருந்தசிறியபிரிவினை முஸ்லிம் கட்சிகளின் செயற்பாட்டால் முற்றிப்போகும் அளவுக்கு இட்டுச் செலலப்பட்டிருக்கின்றது. மக்களைவழிநடத்துவதில் இக்கட்சிகள் தோற்றுப் போகின்றனஎன்றேஉணரமுடிகிறது. கல்முனைமாநகரசபையிலிருந்துசாய்ந்தமருதுதனியாகப் பிரிந்தால் கல்முனைமாநாகரசபையின் அதிகாரம் தமிழர்களுக்குப் போய்விடும் என்றுகல்முனைஅரசியல்வாதிகள் சிலர் கருதுகின்றனர். ஆனால் அதற்குசாத்தியம் இல்லையென்றேபெரும்பாலானவல்லுனர்கள்கருதுகின்றனர். கல்முனைமாநகரசபைக்குதனிஉறுப்பினர் வட்டாரங்களிலிருந்து 22 உறுப்பினர்களும்,பலஉறுப்பினர் வட்டாரம் ஒன்றிலிருந்து இரண்டுஉறுப்பினர்களுமாகமொத்தம் 24 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். இதுஉள்ளுராட்சியின் 60 வீதவட்டாரமுறைஉறுப்பினர்களாகும். அத்துடன் உள்ளுராட்சிமன்றத்தின் விகிதாசாரஅடிப்படையில் 40 வீதமுறைமையின் படி 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர். இதனடிப்படையில் கல்முனைமாநகரசபைக்கு கூட்டுமொத்தமாக (241016) 40 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். ஆனால் விகிதாசாரரீதியாகவருகின்றஆசனங்களின் அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதிகளைமேவிதமிழர்களின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் மாநகரசபையில் மேலோங்கமுடியாது. அதேபோன்று இன்றையவட்டாரஅடிப்படையில் கல்முனைமாநகரசபையின் சாய்ந்தமருதுநீங்களாக 18 உறுப்பினர்கள் தெரிவாகும் வகையில் வகுக்கப்பட்டுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முஸ்லிம்கள் 11 உறுப்பினர்கள்,தமிழர்கள் 7 உறுப்பினர்களும் தெரிவாகும் வகையில் வட்டாரங்கள் வகுக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது. நியாயங்கள் இப்படி இருக்கவீன் சந்தேகங்களும்,அச்சங்களுமே இக்குழப்பத்துக்குவழிகோழியுள்ளன. எனினும் கல்முனைமற்றும் சாய்ந்தமருதுஆகிய இரு ஊர் மக்களாலும் கடந்தசெயற்பாடானதுஉச்சபிரதேசவாதத்துக்குவித்திடும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்டாயம் பொறுப்புச் சொல்லவேண்டியர்கள் என்பதைமறுக்கமுடியாது. இப்பிரச்சினைசுமுகமாகஏலவேஓர் உடன்பாட்டுக்குவரமுடியுமானபிரச்சினையாகும். இரண்டுஊர்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டுஅரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் இதற்குப் பின்னணியில் இருக்கும் என்றுசந்தேகிக்கத் தோன்றுகின்றது. இரண்டுஊராரும் வீதிக்குவந்தபோதுஎந்தவிதமானசமரசமுயற்சிகளுக்குமானமுன்னெடுப்புகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் எடுக்கப்பட்டதாகதெரியவில்லை. வெறுமனேதலைநகரிலிருந்துகளநிலவரங்களைஅறிபவர்களாகத்தான் இருந்திருக்கமுடியும். ஆனால் முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் தமதுசெயற்பாடுகளைமுன்னெடுக்கவேண்டியுள்ளகாலகட்டமாகும். புதியயாப்புக்கானமுயற்சிகள் பரவலாகமுன்னெடுக்கப்பட்டிருக்கின்றநிலையில் தமதுஅரசியல் தலைவர்கள் மீதுநம்பிக்கைவைத்துஅவர்களிடம் பொறுப்பைஒப்படைத்துவிட்டுஒதுங்கியிருக்கும்காலம் இதுவல்ல. முஸ்லிம் புத்திஜீவிகள்,தலைவர்கள், இளைஞர்கள்,மார்க்கஅறிஞர்கள் கடும் அவதானத்துடனும் தீர்க்கதரிசனமாகச் சிந்தித்துசெயற்படவேண்டியதுஅவசியமாகும்.
0 Comments