கிளிநொச்சி விவசாயிகளுடன் அறிவைப் பகிர்ந்து கொண்ட கொமர்ஷல் வங்கி

நுண் மற்றும் சிறிய நடுத்தர (SME) தொழில் முயற்சிப் பிரிவுகளை ஊக்குவிப்பதற்காக கொமர்ஷல் வங்கி மேற்கொண்டு வரும் செயற் திட்டத்தின் நன்மைகள் கிளிநொச்சி விவசாயிகளுக்கும் கிடைத்துள்ளன. பயிர்ச்செய்கையை இலாபகரமாக்குவதற்கான சிறந்த செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வலுவூட்டப்பட்டுள்ளனர்.
கொமர்ஷல் வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் ஒத்துழைப்போடு வங்கியின் கிளிநொச்சி கிளை அண்மையில் இந்தப் பிரதேசத்தில் உள்ள விவசாய அமைப்புக்களின் 154 பிரதிநிதிகளுக்கான பன்முக கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பூரண ஒத்துழைப்போடு இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாவட்டத்தில் இவ்வகை கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இதுவே முதற் தடவையாகும். தொழில்நுட்ப அறிவு பயிர்ச் செய்கை ஆற்றல் தொடர்பான விளக்கம், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பயிர்ச்செய்கை செலவைக் குறைக்கக் கூடிய புதிய விவசாய உபகரணங்கள் பற்றிய கலந்துரையாடல், பயிர்ச்செய்கை துறையில் இளைய தலைமுறையினரை எவ்வாறு கவர்ந்திழுப்பது என்பது பற்றிய கலந்துரையாடல் என பல்வேறு அம்சங்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த எல்லா விளக்கங்களும் அரிச ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இரண்டு துறைசார் நிபுணர்களால் வழங்கப்பட்டன.
நிதிக் கற்கைகள் பற்றிய பிரதான விளக்கம் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் பி.சிவதீபனால் வழங்கப்பட்டது. பங்குபற்றிய விவசாயிகளின் அனுபவத்துக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில் கொமர்ஷல் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவு வங்கியின் பல்வேறு நிதிச் சேவைகள் பற்றிய புறம்பான விளக்கத்தையும் வழங்கினர். பயிர்ச் செய்கையாளர்கள் தமது விவசாய வர்த்தகத்தை அபிவிருத்தி செய்து கொள்ள இந்த விளக்கம் பிரதான கருவியாக அமைந்தது.
வங்கியின் தனியார் வங்கிப்பிரிவு மற்றும் ளுஆநு பிரிவின் உதவி பொது முகாமையாளர் திலக்ஷன் ஹெட்டிஆரச்சி இது சம்பந்தமாகக் கருத்து தெரிவிக்கையில் 'இதை நாம் விவசாயத்தில் சிறந்த நிதிச் செயற்பாட்டு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான ஒரு நிகழ்வாக மட்டும் நோக்கவில்லை. மாறாக புதிய நுண் தொழில் முயற்சியாளர்களை சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் கருதுகின்றோம். இலங்கை ஒரு விவசாய தேசம். அந்த வகையில் இந்த நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கி என்ற வகையில் இந்த நாட்டை போஷிக்கும் ஒரு பிரிவுக்கு பெறுமதிகளை அதிகரிப்பதையிட்டு நாம் பெருமை அடைகின்றோம்' என்றார்.
கண்டாவளை, பெரியகுளம், மகிலன்காடு, னு3 பனங்கண்டி விவசாய அமைப்புக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த விவசாயிகளே கலந்து கொண்டனர். கண்டாவளை மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சிவதீபன், தொழில்நுட்ப அதிகாரி நிரோஜன், பரந்தன் அரிசி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி அதிகாரி பொன்னகிபிருந்திரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கொமர்ஷல் வங்கி அபிவிருத்தி கடன் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் மோஹன் பெர்ணாண்டோ, நிறைவேற்று அதிகாரி பிரசன்ன ஜயமஹா கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டனர்.
கொமர்ஷல் வங்கி தொழில்முயற்சியாளர்களுக்காக இது போன்ற பல நிகழ்வுகளை நாட்டின் பல பாகங்களில் நடத்தி வருகின்றது. இதுவரை இத்தகைய 62 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 5700 தொழில்முயற்சியாளர்கள் இதனால் நன்மை அடைந்துள்ளனர். திஸ்ஸமஹாராம, மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இதுபோன்ற பிரத்தியேக நிகழ்வுகளை பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும் வங்கி நடத்தி உள்ளது. அவற்றில் 380க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று நன்மை அடைந்துள்ளனர்.
இந்நிகழ்வுகளுக்கு வங்கியின் 16 விவசாய மற்றும் நுண்நிதிப் பிரிவுகள் பூரண ஆதரவளித்து வருகின்றன. தமது விவசாய அல்லது நுண் நிதிச் செயற்பாடுகளுக்கு உதவி தேவைப்படும் நபர்களை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான விவசாய மற்றும் நுண் நிதி உதவிகளை வழங்குவதில் இந்தப் பிரிவுகள் அளப்பரிய பங்காற்றி வருகின்றன.
இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுரம், கிளிநொச்சி, பண்டாரவளை, வெள்ளவாய, ஹிங்குராக்கொடை, கலேவளை, அச்சுவேலி, வவுனியா, காத்தான்குடி, திஸ்ஸமஹாராம, நெலுவ, பொத்துவில் மற்றும் அக்கறைபற்று ஆகிய இடங்களில் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதிப்பிரிவுகள் செயற்படுகின்றன.
(முற்றும்)

Post a Comment

0 Comments