(எம்.எம். ஜபீர்)
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் திவிமகட கப்புறுக திட்டத்தின் கீழ் அம்பாரை பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபையினால் சம்மாந்துறை பிரதேசத்தில் 1000 குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை முஅல்லா பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
தென்னை பயிர்செய்கை சபையின் அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.ஐ.சுசந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் தென்னங் கன்றுகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென்னை பயிர்செய்கை சபையின் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கே.எஸ்.ஆர்.சம்பத், தென்னை பயிர்செய்கை சபையின் சம்மாந்துறை உப அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஐ.எல்.சனீர், எம்.ஐ.பஸ்லியா, ரீ.எல்.றிஸ்வானா, ஆர்.பிரியதர்சினி, ஏ.எல்.ஜூமானா பேகம் உள்ளிட்ட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
குறுகிய காலங்களில் காய்க்கும் தென்னை மரங்களை வழங்கி வீட்டுத்தோட்டங்களில் நடுவதன் மூலம் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டை முழுமையாக ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
0 Comments