(யூ. கே. காலித்தீன்)
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் இதுவரை கைகூடாத நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புகள் கைகூடாமல் காலம்தாழ்த்தப்பட்டதற்க்கான காரணங்களை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒருகட்டமாக, சாய்ந்தமருதிலுள்ள
18 மஹல்லா பள்ளிவாசல்களின் ஊடாகவும், ஊர் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று (07) சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியிலுள்ள தக்வா ஜும்மா பள்ளிவாசலில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில்
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருதிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தினமும் சுழற்சி முறையில் இடம்பெறத்தக்க வகையில் பிரச்சார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



0 Comments