வீரச்சோலை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தெளிவூட்டல் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.சிஹாப்)
கிராம மட்டத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து நாட்டில் உள்ள பிரதேச செயலகப் பிரிவு தோறும் நடைமுறைப் படுத்தி வருகின்றது.

அந்த வகையில் நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் S. ரங்கநாதனின் வழிகாட்டலில் சொறிக் கல்முனை .2 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீரச்சோலை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதை வஸ்து பாவனையில் இருந்து விடுபடலும் கல்வியின் முக்கியத்துவமும் எனும் தலைப்பில் தெளிவூட்டல் நிகழ்வும் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் S திருச்செல்வம் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வளவாளர் K.தில கேஸ்வரம் , பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்J.மயூரன் ஆகியேந்  பிரதேச பொதுவளவாளராக கலந்து கொண்டார். இதன் போது பிரதேச பொது மக்களுக்கான விளிப்புணர்வு வீதி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன



Post a Comment

0 Comments