ஆயுள் காப்புறுதித் தலைவர்களான செலிங்கோ லைஃப் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் ஹெட்டிப் பொலயில் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளது.
முதலாவது மாடி கந்தேகெதற ஹவுஸ் ஒப் பெஷன் இலக்கம் 152ஃயு ஹெட்டிபொல வெலிகமுவ என்ற இடத்தில் இந்தப் புதிய கிளை அமைந்துள்ளது. மிக இலகுவாக சென்று வரக் கூடிய இந்த இடத்தில் போதிய வாகனத் தரிப்பிட வசதிகளும் அமைந்துள்ளன.
படத்தில் (வலமிருந்து) செலிங்கோ லைஃப்பின் சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் லலித் பண்டார, உதவி பிராந்திய விற்பனை முகாமையாளர் றுக்மன் டி சில்வா, கிளை பிரதானி விஜித் புஷ்பகுமார ஆகியோர் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக கிளையைத் திறந்து வைப்பதைப்ப படத்தில் காணலாம்.


0 Comments