தேசிய மீலாத் வாழ்த்து செய்தி கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப்


இஸ்லாத்தின் அடிப்படையில் எங்களது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதன் மூலமே ஏனையோருக்கு முன்மாதிரியாக நாம் திகழ முடியும். இதுவே பல்வேறு இன்னல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இஸ்லாத்திற்காக தங்களது வாழ்நாள் முழவதையும் அர்ப்பணித்த நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நாம் வழங்கும் உயரிய கண்ணியமாக அமையும் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீரா சாஹீப்

எத்தனை குலம்கள், கோத்திரம்கள், கொள்கைகள், கோட்பாடுகள், ஆச்சாரம்கள்,மார்க்கம்கள் நம்மிடையே இருப்பினும் அவை அனைத்தும் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்வதற்காக நமக்கு அருளப்பட்ட சாதனம்கள் எனக்கொண்டு ஐக்கியப்படு வோமாக.
வேற்றுமைகளில் ஒற்றுமையைக்காணும் பொறி முறைகளை பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு சமாதானம் எனும் நமது உயர்ந்த பண்பாடைப் பாதுகாப்போமாக.
ஐக்கியப்பட்டு சமாதானத்தைப் பற்றிப்பிடித்தவர்களாக பிரிபடாத ஒரேநாட்டில் ஒரு வரை ஒருவர் பரிந்துகொண்டவர்களாக வாழ்வாங்கு வாழ்ந்து வையக வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் மகுடம் சூட்டும் கூட்டணியாக வெளிப்படுவோமாக.
ஐக்கியமாக, சமாதானமாகப் பயணிக்கும் ஒருகூட்டணியாகப் பலம் பெறுவோமாக.என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments