மிண்சார சபையின் தலைமைக் காரியாலயத்தின் முன்வாயலில் கடந்த 2 நாட்களாக மின்சார சபையின் நிரந்தர தொழிலாளா்கள் சங்கம் உண்னாவிரதம்

(அஷ்ரப் ஏ  சமத்)

கொழும்பில் உள்ள மிண்சார சபையின் தலைமைக் காரியாலயத்தின் முன்வாயலில்  கடந்த 2 நாட்களாக  மின்சார சபையின்  நிரந்தர தொழிலாளா்கள் சங்கம் உண்னாவிரதம் இருந்து வருகின்றனா்.  

அவா்கள் தகவல் தருகையில் -  தற்பொழுது  மின்சார சபையின் சாதாரண தொழிலாளா்களுக்கு  50 ஆயிரம் ருபாவுக்கும் குறைவாகவே  வேதனம், மேலதிக கொடுப்பணவுகள் கிடைக்கின்றன. ஆனால் குளிருட்டப்பட்ட அரைகளில்  இருந்து  பொறியியலாாளா்களுக்கு 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட சம்பளம் கிடைக்கின்றது.  அவா்கள் ஓரு போதும் நாங்கள் ஏறி மிண்   இனைக்கும் மிண்சார கட்டையில் நின்று                 வேளை செய்யும்போது அதனைக் கூட  கண்காணிப்பதற்கு கூட இந்த பொறியியலாளா்கள்  வர மாட்டாா்கள்.   அது மட்டுமல்லாமல்  தற்போது மிண்சார சபையில் -  அரசியல் ரீதியாக  மிண்சார சபையில் தொழில்கள்  வழங்கப்படுகின்றன. அதனை உடன்  நிறுத்தல் வேண்டும்.  அத்துடன்  எங்களது பிரச்சினையை  தொழிலாளா் ஆணையாளா். மற்றும் சம்பள முரண்பாடுகளையும்  அரசாங்கம் நிவா்த்தி செய்து தரல் வேண்டும் .  ஒரு, இரு நாட்களில்  எங்களுக்கு தீா்வு கிட்டாவிட்டால் நாடு முழுவதும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை  நடாத்த உள்ளதாக  இவ் ஊழியா் சங்கத்தின் பிரநிதி தெரிவித்தாா்.


Post a Comment

0 Comments