தெரிவு செய்யப்பட்ட 32 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கணணிகள் மற்றும் மடி கணனிகள் ஆகியன கல்வி அமைச்சின் மூலமாக நேற்று வழங்கி வைக்கப்பட்டது.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை வழங்கி வைத்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 14 பாடசாலைகளுக்கும்,கண்டி மாவட்டத்தில் 5 பாடசாலைகளுக்கும்,மேல் மாகாணத்தில் 3 பாடசாலைகளுக்கும்,ஊவா மாகாணத்தில் 2 பாடசாலைகளுக்கும்,சப்ரகமுவ மாகாணத்தில் 6 பாடசாலைகளுக்கும்,தென் மாகாணத்தில் 2 பாடசாலைகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கணணிகள் வழங்கப்படுவதையும் அதனை பாடசாலை அதிபர்கள் பெற்றுக் கொள்வதையும் படங்களில் காணலாம
0 Comments