அம்பாறை மாவட்டத்தில் வீரக்குட்டி பொன்னம்பலம் அமைப்பினால் உதவிகள்

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பட்ட சமூகசேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினர் இவ்வருடத்தில் தங்களின் சேவையினை கார்த்திகை மாதம் தொடக்கம் எம் உறவுகளின் வேண்டுகோளிற்கினங்க பரவலாக வடகிழக்கின் செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றனர். 

அந்தவகையில் சென்ற கார்திகை மாதம் 24.11.2017  திகதியன்று அம்பாறைமாவட்டத்தில் நாவிதன்வெளிப்பிரதேசத்திற்குட்பட்ட சம்மாந்துறை கல்விவலயத்தைச்சார்ந்த மிக கட்டப்பாடசாலையான கமு.சது.வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன்பாடசாலையைச்சார்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன. தொடர்சியாக  26.11.2017 திகதியன்று முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கல்குடா வலயத்தைச்சார்ந்த சுமார் 05 பாடசாலையைச்சார்ந்த 50  மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் மற்றும்பாடசாலை புத்தகப்பை போன்றன வழங்கப்பட்டன. 

மேலும் அம்பாறைமாவட்டத்தில் நாவிதன்வெளிப்பிரதேசத்திற்குட்பட்ட சம்மாந்துறை கல்விவலயத்தைச்;சார்ந்த மற்றொரு மிக கட்டப்பாடசாலையான கமு.சது. கணேஷவித்தியாலயத்தைச்மாணவர்கள் இக்காலம் மழைகாலம் என்பதனால் அவர்கள்பாடசாலை வருகையான மிக குறைவாக உள்ளது மற்றும் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மிக வறிய மாணவகள் இந்நிலையினை அறிந்த அதிபர் சமூகசேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரிடம்  மூலம் குடைகள் பெறப்பட்டு அவ்மாணவச்செல்வங்களுக்கு 04.12.2017 திகதி வழங்கப்பட்டன.

தொடர்ந்து வவுணதீவுப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட இழுப்பட்டிச்சேனை எனும் கிராமத்தைச்சார்ந்த மிகவும் வறுமை குடும்பத்தைச்சார்ந்த Áற்றுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு  14.12.2017 திகதியன்று இழுப்பட்டிச்சேனை சனசமூக மண்டபத்தில் வைத்து அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன. 

இவ்வாறு கிழக்கில் தொடர் சேவையினை செய்து கொண்டு தம்முடைய சேவைப்பயணத்தினை வடக்கின் வறியமாணவர்களை தேடி வறுமையை அகற்றி கல்வி கொடுக்க தங்கள் சேவைப்பயணத்தில் லண்டனில் அரச அங்கிகாரத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் SRILANKAN GOLDSMITH ASSOCIATION எனும் அமைப்புடனும் மற்றும் இலங்கைவிஸ்வகர்ம சங்கத்துடன் இணைந்து கிளிநொச்சிகல்வி வலயத்தில் 250 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் இன்றைய நாள் வழங்கி வைக்கப்பட்டன
என்றும் இவ்வாறு வடகிழக்கின் வறிய மாணவர்களுக்கு தன்னிகரற்ற சேவையினை செய்துவரும் வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பும் அதன் துணை அமைப்பான லண்டனில் அரச அங்கிகாரத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் SRILANKAN GOLDSMITH ASSOCIATION எனும் அமைப்பின் சேவை என்றுமே போற்றுதலுக்குரியது.










Post a Comment

0 Comments